நாகையில், அனுமதியின்றி சவுடு மண் ஏற்றி வந்த 3 பேர் கைது - லாரிகள் பறிமுதல்

நாகையில் அனுமதியின்றி சவுடு மண் ஏற்றி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2019-07-26 22:15 GMT
நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் உத்தரவின் பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நாகை டாடா நகர் என்ற இடத்தில் டவுன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 3 லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சவுடு மண் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து லாரி டிரைவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், ஓர்குடி மேலத்தெருவை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (வயது 34), சிக்கல் தென்கால்ஒரத்தூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் (33), நாகை சிவன் மேல வீதியை சேர்ந்த சோமசுந்தரம் (38) ஆகியோர் என்பதும், இவர்கள் உரிய அனுமதியின்றி சவுடு மண் ஏற்றி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்ச்செல்வன், சந்தோஷ்குமார், சோமசுந்தரம் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 லாரிகளையும் பறிமுதல் செய் தனர்.

மேலும் செய்திகள்