நாகையில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

நாகையில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-27 23:00 GMT
நாகப்பட்டினம்,

அரசு அலுவலர்களுக்கு கூடுதல் நேரம் பணி வழங்கும் உதவி கலெக்டரை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் நாகை தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அமுதவிஜயரங்கன் தலைமை தாங்கினார். தாசில்தார், துணை தாசில்தார் அலுவலர் சங்க மாநில தலைவர் குமார் முன்னிலை வகித்தார். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் சிவக்குமார் கலந்துகொண்டு பேசினார்.

நாகை உதவி கலெக்டர் அலுவலகம் மற்றும் வட்ட அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலர்களை கொத்தடிமை போல் உதவி கலெக்டர் நடத்தும் போக்கை கைவிட வேண்டும். பெண் பணியாளர்களிடம் அலுவலக நேரம் முடிந்த பின்னரும் கூடுதல் நேரம் பணி வாங்கும் போக்கை கைவிட வேண்டும். விடுமுறை நாட்களிலும் பணி செய்ய வற்புறுத்துவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாநில தலைவர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் தேவேந்திரன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்