நாகர்கோவிலில் மாவட்ட அளவிலான கபடி போட்டி

குமரி மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கபடி போட்டிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது.

Update: 2019-08-01 22:45 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கபடி போட்டிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட கபடி கழக தலைவர் பூபதி தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் பென் எபனேசர் சாம் வரவேற்று பேசினார். பள்ளி மாணவர்களுக்கான போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெபராஜ் தொடங்கி வைத்தார். பள்ளி மாணவிகளுக்கான போட்டியை மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல் தொடங்கி வைத்தார். முடிவில் கபடி கழக மாவட்ட இணைச்செயலாளர் தர்மலிங்க உடையாளர் நன்றி கூறினார்.

பள்ளி மாணவ- மாணவிகளுக்கான போட்டியில் 50-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டு விளையாடின. பிற்பகலில் ஜூனியர் ஆண்கள் போட்டியும், மாலையில் கல்லூரி மாணவர்களுக்கான போட்டியும், இரவு கல்லூரி மாணவிகளுக்கான போட்டியும் நடந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) குமரி மாவட்ட கபடி கிளப்புகள் இடையேயான போட்டியும், நாளை (சனிக்கிழமை) இறுதிப்போட்டியும் நடக்கிறது. வெற்றி பெற்ற அணிகளுக்கு நாளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் பரிசு வழங்குகிறார்.

மேலும் செய்திகள்