மீஞ்சூர் அருகே 53 பேருக்கு பட்டாவுடன் மாற்று இடம்

சிறுவாக்கம் ஊராட்சியில் உள்ள இலவம்பேடு ஏரிக்கரையில் இருளர் இன மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்தனர்.

Update: 2019-08-16 22:15 GMT
மீஞ்சூர்,

மீஞ்சூர் அருகே சிறுவாக்கம் ஊராட்சியில் உள்ள இலவம்பேடு ஏரிக்கரையில் இருளர் இன மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்தனர்.

இவர்கள் நீர்நிலை பகுதியில் வசித்து வந்ததால் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க முடியாமல் ஊராட்சி நிர்வாகம் இருந்து வந்தது மேலும் குடியிருப்புகளுக்கான இடமாக இல்லாத அப்பகுதியில் சிறிய குடிசைகளை அமைத்து தங்கியிருந்த நிலையில் மழைக்காலங்களில் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் மாற்று இடம் பட்டாவுடன் வழங்க கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவின் பேரில் பொன்னேரி வருவாய் ஆர்.டி.ஓ. நந்தகுமார், தாசில்தார் எட்வர்ட்வில்சன், துணை தாசில்தார் செல்வகுமார் நில அளவை அதிகாரிகள் வினோத், வெங்கடேசன், அருண் ஆகியோர் வேலம்பாக்கம் பகுதியில் உள்ள 1½ ஏக்கர் நிலத்தை 53 வீட்டு மனைகளாக பிரித்து பட்டாக்களுடன் நிலம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்