போலி நகையை அடகு வைத்த பெண் கைது

திருப்புவனத்தில் நகை கடையில் போலி நகையை அடகு வைத்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-08-18 22:30 GMT
திருப்புவனம்,

திருப்புவனம் அருகே உள்ள சொக்கநாதிருப்பு கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி (வயது27). இவர் திருப்புவனம் மெயின் சாலையில் உள்ள ஒரு நகை கடையில் வேலை பார்த்து வந்தார். அந்த நகை கடையில் 38 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ½ பவுன் மதிப்புள்ள 2 மோதிரத்தை அடகு வைத்து ரூ.15ஆயிரம் வாங்கி சென்றார்.

அந்த பெண்ணிடம் பெற்ற நகையை சோதனை செய்தபோது அது போலியான நகை என்று தெரிய வருகிறது. இதுகுறித்து ராமமூர்த்தி திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இதையடுத்து திருப்புவனம் பகுதியில் மற்றொரு நகைக்கடை அருகே நின்றுக்கொண்டிந்த ஒரு பெண்ணை பிடித்து விசாரணை நடத்தியபோது அவர் தான் போலியான நகையை அடகு வைத்து பணம் பெற்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தியபோது அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகாவிற்குட்பட்ட கெடுகாணூர் கிராமத்தைச் சேர்ந்த சுமதி (38) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.15ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்