மணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு பறக்கும் வேல்காவடி ஊர்வலம்

மணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு பறக்கும் வேல் காவடி ஊர்வலம் நேற்று புறப்பட்டு சென்றது.

Update: 2019-08-19 22:00 GMT
மணவாளக்குறிச்சி,

மணவாளக்குறிச்சி, மணக்காட்டுவிளையில் பறக்கும் வேல்காவடி மற்றும் புஷ்ப காவடி விழா நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் காலையில் தீபாராதனை, மாலையில் திருவிளக்கு பூஜை, நையாண்டி மேளம், இரவு 7 மணிக்கு காவடி பூஜை, 7.30 மணிக்கு வேல் தரித்தல், 9 மணிக்கு தீபாராதனை போன்றவை நடந்தன.

நேற்று அதிகாலை 5 மணிக்கு காவடி கட்டுதல், காலை 6.30 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு காவடி பவனி, பகல் 11 மணிக்கு சமபந்தி விருந்து போன்றவை நடந்தது.

திருச்செந்தூருக்கு ஊர்வலம்

மாலை 3 மணிக்கு பறக்கும் வேல்காவடி மற்றும் புஷ்பகாவடிகள் ஊர்வலம் மணக்காட்டுவிளையில் இருந்து புறப்பட்டது. ஊர்வலம் பரப்பற்று, படர்நிலம், மண்டைக்காடு, கூட்டுமங்கலம், மணவாளக்குறிச்சி, வெள்ளமோடி வழியாக திருச்செந்தூர் நோக்கி சென்றது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்