கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.ஐ.சி. முகவர்கள் தர்ணா

திருச்சி ஜங்ஷனில் எல்.ஐ.சி. அலுவலக வளாகத்தில் எல்.ஐ.சி. முகவர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நேற்று நடந்தது.

Update: 2019-08-20 22:45 GMT
திருச்சி,

திருச்சி ஜங்ஷனில் எல்.ஐ.சி. அலுவலக வளாகத்தில் எல்.ஐ.சி. முகவர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நேற்று நடந்தது. இந்த போராட்டத்திற்கு கோட்டத்தலைவர் தங்கமணி தலைமை தாங்கினார். மேற்கு கோட்ட தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். தமிழ் மாநிலக்குழு செயல் தலைவர் பூவலிங்கம் தர்ணாவை தொடங்கி வைத்து பேசினார். எல்.ஐ.சி. முகவர்களுக்கு மருத்துவ நிதி உதவி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மருத்துவ நிதி உதவி வழங்க தனி அதிகாரி நியமித்திட வேண்டும், அனைத்து முகவர்களுக்கும் பாரபட்சமின்றி மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும், எல்.ஐ.சி. முகவர்களுக்கான இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்திட இடவசதி செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடந்தது. இதில் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இருந்து எல்.ஐ.சி. முகவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்