மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மீனவ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் திருவாரூரில் நடந்தது

மீனவர்களை பாதுகாக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திருவாரூரில் மீனவ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-08-22 23:00 GMT
திருவாரூர்,

திருவாரூரில், கலெக்டர் அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யு.சி. மீனவ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் முருகையன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் ராமதாஸ் முன்னிலை வகித்தார்.

ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் சந்திரசேகர ஆசாத், மாநில துணைத்தலைவர் மாரிமுத்து, நிர்வாகி புண்ணீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம்

கடலோர மேலாண்மை மண்டல அறிவிப்பி்னை திரும்ப பெற வேண்டும். கடல் மீன் வளர்ப்பு மசோதாவை ரத்து செய்ய வேண்டும். கடலோர பகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இறால் பண்ணைகளை தடை செய்ய வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் மீனவர் குறைத்தீர்க்கும் கூட்டம் நடத்திட வேண்டும். மீனவர்களை பாதுகாக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், மீன் பிடி தடை காலத்தில் மீன் விற்பனையாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பி்னர். 

மேலும் செய்திகள்