நாகையில் தாய்ப்பால் வார விழா கலெக்டர் பங்கேற்பு

நாகையில் தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. இதில் கலெக்டர் சுரேஷ்குமார் கலந்து கொண்டார்.

Update: 2019-08-31 23:00 GMT
நாகப்பட்டினம்,

நாகையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. விழாவுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம் தலைமை தாங்கினார். மாவட்ட சமூக நல அலுவலர் உமையாள் முன்னிலை வகித்தார். விழாவில் மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பிறந்த குழந்தைகளின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் தாய்ப்பாலில் மட்டுமே உள்ளது. குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது தாயின் உடல் நலத்திற்கு நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை தொடர்ந்து கொழு கொழு குழந்தைகளுக்கான போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற குழந்தைகளின் தாய்மார்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதில் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சித்ரா மற்றும் தொண்டு நிறுவனங்களை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர். முடிவில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மகாராணி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்