தர்மபுரி குண்டலப்பட்டியில் ஸ்ரீரங்கநாதன்-ரஞ்சிதம் மஹால் - அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்

தர்மபுரி குண்டலப்பட்டியில் ஸ்ரீரங்கநாதன்-ரஞ்சிதம் மஹாலை அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்.

Update: 2019-09-02 22:15 GMT
தர்மபுரி, 

தர்மபுரி-கிருஷ்ணகிரி மெயின்ரோட்டில் குண்டலப்பட்டி வருவான் வடிவேலன் கல்லூரி அருகில் ஸ்ரீரங்கநாதன்-ரஞ்சிதம் மஹால் குளிர்சாதன வசதியுடன் கூடிய திருமண மண்டபம் மற்றும் எஸ்.ஆர்.வி.கான்பரன்ஸ் ஹால் குளிர்சாதன வசதியுடன் கூடிய கூட்டஅரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும், மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான கே.பி.அன்பழகன் தலைமை தாங்கி, ரிப்பன்வெட்டியும், குத்துவிளக்கேற்றியும் திருமண மண்டபத்தை திறந்து வைத்தார். விழாவிற்கு வந்தவர்களை மண்டபத்தின் உரிமையாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான எஸ்.ஆர்.வெற்றிவேல்-மரகதம் குடும்பத்தினர் வரவேற்றனர்.

விழாவில் சென்னை சத்யா கன்ஸ்ட்ரக்சன் இயக்குனர் பார்வதி அண்ணாமலை, காரிமங்கலம் தானப்பகவுண்டர் பள்ளி தாளாளர் மல்லிகா அன்பழகன், தர்மபுரி சசிஞானோதயா, சி.பி.எஸ்.இ. பள்ளி இயக்குனர் சசிகலா பாஸ்கர், மொரப்பூர் சுமதி எண்டர்பிரைசஸ் இயக்குனர் சுமதி சிங்காரம், தர்மபுரி செந்தில் மெட்ரிக் பள்ளி துணைத்தலைவர் மணிமேகலை கந்தசாமி ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர். விழாவையொட்டி சென்னை திருவல்லிக்கேணி வித்வான் கிருஷ்ணாச்சார் குழுவினர் நடத்தும் ஸ்ரீராமர்-சீதா திருமண வைபோகம் நடைபெற்றது. இந்த விழாவில் தொழிலதிபர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள், அரிசி ஆலை அதிபர்கள், பள்ளி, கல்லூரி நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து அதன் நிர்வாகிகள் கூறியதாவது:- இந்த திருமண மண்டபத்தில் 1,500 பேர் அமரக்கூடிய வகையில் குளிர்சாதன வசதியுடன் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. குளிர்சாதன வசதியுடன் 500 பேர் அமரக்கூடிய உணவு அருந்தும் அறை, மணமக்கள் மற்றும் விருந்தினர்கள் தங்குவதற்கு குளிர்சாதன அறைகள், அதிநவீன வசதியுடன் கூடிய சமையல்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதிதாக அமைக்கப்பட்டுள்ள கான்பரன்ஸ் ஹால் கூட்டங்கள் நடத்த ஏற்ற வகையில் அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கார் பார்க்கிங் வசதி, குழந்தைகள் விளையாடி மகிழ்ந்திட பூங்கா வசதி, மின்தடையில்லா ஜெனரேட்டர் வசதி உள்ளிட்ட அனைத்துவிதமான வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. மிகவும் பாதுகாப்பான வசதியுடன் திருமண மண்டப வளாகத்தை சுற்றி சுற்றுச்சுவர்கள் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றனர்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் நகர கூட்டுறவு வங்கி தலைவரும், அ.தி.மு.க. முன்னாள் நகர செயலாளருமான எஸ்.ஆர்.வெற்றிவேல், இயக்குனர்கள் வி.மரகதம் வெற்றிவேல், வி.ரேணுகாதேவி, வி.நிரேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. பி.எஸ்.அண்ணாமலை, தர்மபுரி பச்சமுத்து கல்வி நிறுவனங்களின் தலைவர் பி.பாஸ்கர், செயலாளர் பி.அண்ணாதுரை மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்