காஞ்சீபுரத்தில் வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

காஞ்சீபுரத்தில் வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

Update: 2019-09-05 22:30 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இதற்கு காஞ்சீபுரம் நகர இந்து முன்னணி மற்றும் காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்தனர்.

இந்து முன்னணி காஞ்சீபுரம் நகர பொதுச்செயலாளர் சந்தோஷ் தலைமை தாங்கினார்.

வாகனங்களில் எடுத்து வரப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் ரங்கசாமி குளம், தேரடி, மூங்கில் மண்டபம், காஞ்சீபுரம் பஸ் நிலையம் வழியாக சங்கரமடம் சென்றது. பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு காஞ்சீபுரம் பொன்னேரிக்கரை ஏரியில் கரைக்கப்பட்டது.

விநாயகர் ஊர்வலத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்