முத்துப்பேட்டை ரெயில் நிலையத்தை தரம் உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் நடந்தது

முத்துப்பேட்டை ரெயில் நிலையத்தை தரம் உயர்த்தக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2019-09-10 22:45 GMT
முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ரெயில் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் செல்லத்துரை முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழ்மணி கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தின்போது ரெயில்வே நிர்வாகத்திற்கு எதிராகவும், உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றி தரும்படியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கனகசுந்தரம், ராஜேந்திரன், விவசாய சங்க தலைவர்கள் வீரமணி, துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முத்துப்பேட்டை ரெயில் நிலையத்தை மீண்டும் “பி” கிரேடாக தரம் உயர்த்திட வேண்டும். நிலைய அதிகாரியை நியமனம் செய்து முன்பதிவு உட்பட சகல வசதிகளுடன் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாங்கண்ணி-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலை திருவாரூர், முத்துப்பேட்டை வழியாக காரைக்குடி வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பகுதியில் காலியாக உள்ள கேட் கீப்பர்கள் காலிப்பணிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. 

மேலும் செய்திகள்