காஞ்சீபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.1,700 கோடி பயிர்க்கடன்

காஞ்சீபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு பயிர் கடனாக ரூ.1,718.64 கோடி வழங்கப்பட்டு உள்ளதாக மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் ஆர்.கே.சந்திரசேகரன் தெரிவித்தார்.

Update: 2019-09-12 22:30 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 142 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளிட்ட 264 கூட்டுறவு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் 28 கிளைகள் காஞ்சீபுரம் மாவட்டத்திலும், 23 கிளைகள் திருவள்ளூர் மாவட்டத்திலும் செயல்பட்டு வருகின்றன.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2011 முதல் கடந்த ஜூலை மாதம் வரை 3 லட்சத்து 30 ஆயிரத்து 819 விவசாயிகளுக்கு ரூ.1,718.64 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2016-ம் ஆண்டு 144 சங்கங்கள் மூலம் 27,155 நபர்களுக்கு ரூ.110.29 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டத்தில் 2011 முதல் நடப்பு ஆண்டு வரை 1 லட்சத்து 23 ஆயிரத்து 693 பேருக்கு ரூ.38.61 கோடி பயிர் கடன் மூலம் வட்டி மானியம் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்