அண்ணா பிறந்தநாளையொட்டி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி

அண்ணா பிறந்தநாளையொட்டி குமரி மாவட்ட அளவில் மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி நடந்தது.

Update: 2019-09-14 22:45 GMT
நாகர்கோவில்,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நாகர்கோவில் வடசேரியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடந்தது. அண்ணா பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் இந்த போட்டி நடத்தப்பட்டது. போட்டியை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அதிகாரி டேவிட் டேனியல் தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்டத்தில் பல பள்ளிகளில் இருந்து 170 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியானது 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது.

பரிசு

அதாவது 13 வயது, 15 வயது மற்றும் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் என 3 பிரிவுகளாக போட்டிகள் நடந்தது. இந்த பிரிவுகளில் 13 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் 15 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகள் 10 கிலோ மீட்டர் தூரமும் சைக்கிள் ஓட்டினார்கள். இதே போல 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் 20 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகள் 15 கிலோ மீட்டர் தூரமும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்