பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருவள்ளூர், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2019-09-16 22:30 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தை தொடங்கி வைத்து மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கூறியதாவது:-

மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தாசில்தாரும் தங்களது வட்டத்திற்குட்பட்ட பேரிடரால் பாதிப்பிற்குள்ளாகும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பதற்கான இடங்களை தேர்வு செய்து தங்க வைத்துக்கொள்ள வேண்டும். பேரிடர் தொடர்பான நேரங்களில் பொதுமக்களை தங்கவைப்பதற்காக காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை, மீன்வளத்துறையினருடன் இணைந்து செயல்பட வேண்டும். வடகிழக்கு பருவமழை காரணமாக நீர்ப்பிடிப்பு பகுதிகளின் வாய்க்கால், குளம் மற்றும் குட்டை ஆகியவற்றில் உள்ள அடைப்புகளை அகற்றவேண்டும். அப்போது, மரங்கள் விழுந்து பாதிப்பு ஏற்பட்டால் அவற்றை அகற்ற பொக்லைன் எந்திரங்கள் மற்றும் மரம் அறுக்கும் கருவிகளை கூடுதலாக வைத்திருக்க வேண்டும். 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நல்லமுறையில் பயன்பாட்டில் உள்ளதா? என்று உறுதி செய்யவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்