முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 12 போ் கைது

5, 8-ம் வகுப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Update: 2019-09-16 22:45 GMT
திருச்சி,

பள்ளிக்கல்விதுறையில் 5, 8-ம் வகுப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் பொதுத் ேதா்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதை திரும்ப பெற கோரியும், அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும் திருச்சி மாவட்ட கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் பாலக்கரையில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி போராட்டம் நடத்த மாவட்ட தலைவர் தர்வேஸ் தலைமையில் நிர்வாகிகள் நேற்று மாலை மரக்கடையில் இருந்து முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் நோக்கி முற்றுகையிட சென்றனர். அப்போது சையது முர்துசா பள்ளி அருகே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களை போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்