அண்ணாவின் இருமொழி கொள்கையில் அ.தி.மு.க. அரசு உறுதியாக உள்ளது - அமைச்சர் காமராஜ் பேச்சு

அண்ணாவின் இருமொழி கொள்கையில் அ.தி.மு.க. அரசு உறுதியாக உள்ளது என திருவாரூரில் நடந்த அண்ணா பிறந்த நாள் விழா கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் கூறினார்.

Update: 2019-09-18 22:30 GMT
திருவாரூர்,

திருவாரூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருவாரூரில் நடந்தது. 
கூட்டத்திற்கு நகர செயலாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பன்னீர்¢செல்வம், கூத்தாநல்லூர் நகர செயலாளர் பஷீர்அகமது, கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் பாஸ்கர், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மீனவரணி செயலாளர் முனுசாமி, அமைப்பு செயலாளர் கோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.  
கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், உணவுத்துறை அமைச்சருமான காமராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அண்ணா  பெயரிலும், கட்சியின் கொடியிலும் ஏற்று கொண்டு செயல்பட கூடிய இயக்கமாக அ.தி.மு.க. விளங்கி கொண்டிருக்கிறது. தி.மு.க.வினர் அண்ணாவையும், அவருடைய கொள்கைகளையும் மறந்துவிட்டனர். அதனால் தான் மக்கள் தி.மு.க.வை ஒதுக்கி வைத்துள்ளனர். அ.தி.மு.க. ஆட்சியின் மீது குறை கூற ஏதாவது ஒரு பிரச்சினையை மு.க.ஸ்டாலின் கையில் எடுக்கிறார். அதில் உண்மை இல்லை என்பதால் அது ஒரு மாதம் கூட நிற்பதில்லை. 
அண்ணாவின் இருமொழி கொள்கையில் அ.தி.மு.க. அரசு உறுதியாக உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே செயல்பாட்டில் இருக்கும். இவ்வாறு அமைச்சர் கூறினார். 
இதில் நகர அவைத்தலைவர் நடராஜன், நகர சிறுப்பான்மை பிரிவு செயலாளர் முகமதுகஜ்ஜாலி, நிர்வாகிகள் பாலாஜி, ரயில்பாஸ்கர், குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார். 

இதேபோல திருத்துறைப்பூண்டி தெற்கு வீதியில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர  செயலாளர் சண்முகசுந்தர் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சிங்காரவேலு வரவேற்றார். முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளர் நடராஜன், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி அம்பிகாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு பேசினார். 
இதில் நகர பொருளாளர் ராஜா, நகர இளைஞரணி பொறுப்பாளர் மரியதாஸ், நகர மாணவர் அணி தினேஷ்குமார், முன்னாள் நகரசபை தலைவர் உமாமகேஸ்வரிகிருஷ்ணமூர்த்தி உள்பட 
பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட கழக துணை செயலாளர் பாலதண்டாயுதம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்