திருவாரூர், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் - அதிகபட்சமாக குவிண்டால் ரூ.5,689-க்கு விலை போனது

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் அதிகபட்சமாக குவிண்டால் ரூ.5,689-க்கு விலை போனது.

Update: 2019-09-18 21:30 GMT
திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 
இந்த ஆண்டு 6 ஆயிரத்து 993 எக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி நடைபெற்றுள்ளது. விவசாயிகள் தங்களது பருத்தியை உரிய விலைக்கு விற்பனை செய்வதற்காக திருவாரூர், குடவாசல், வலங்கைமான் ஆகிய இடங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.

இதில் திருவாரூரை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது பருத்தியை மறைமுக ஏலத்துக்கு வைத்திருந்தனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் முன்னிலையில் ஏலப்பெட்டியை திறந்து வியாபாரிகள் கேட்ட விலையை படித்தனர். இதில் அதிகபட்சமாக பருத்தி குவிண்டாலுக்கு ரூ.5,689-க்கும், குறைந்தபட்சமாக ரூ.4,509-க்கும், சராசரியாக ரூ.5,071&க்கும் விலை போனது. இந்த ஏலத்தில் ரூ.58 லட்சத்து 99 ஆயிரத்து 814 மதிப்பிலான பருத்தி விற்பனை செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்