திருப்பூர் மாவட்டத்தில் ரூ.12,036 கோடி கடன் வழங்க இலக்கு

திருப்பூர் மாவட்டத்தில் 2019-20-ம் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரத்து 36 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-09-18 22:30 GMT
திருப்பூர், 

திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் ஆண்டுதோறும் ஆண்டுக்கடன் திட்டம் வெளியிடப்படுகிறது. அதுபோல் 2019-20-ம் ஆண்டுக்கான கடன் திட்டம் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. அதன் விரிவான விளக்கங்கள் அடங்கிய மலர் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வெளியிடப்பட்டது.

கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி கடன் திட்ட மலரை வெளியிட கனரா வங்கியின் திருப்பூர் மண்டல துணை பொது மேலாளர் ஈஸ்வரமூர்த்தி பெற்றுக்கொண்டார். கலெக்டர் கூறும்போது, மாவட்டத்தின் அனைத்து வங்கிகளும் இணைந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட வேண்டும் என்றார்.

2019-20-ம் ஆண்டுக்கான முன்னுரிமை கடன்களுக்கான மொத்த திட்ட இலக்கு ரூ.12 ஆயிரத்து 36 கோடியாகும். இதில் வேளாண்மை துறைக்கு ரூ.3 ஆயிரத்து179 கோடியும், சிறுவணிகத்துறைக்கு ரூ.7 ஆயிரத்து 223 கோடியும், பிற முன்னுரிமை கடன்களுக்கான வீட்டுக்கடன், மரபு சாரா எரிசக்தி கடன், கல்விக்கடன் மற்றும் இதர கடன்களுக்கு ரூ.ஆயிரத்து 633 கோடியும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது சென்ற ஆண்டுக்கடன் தி்ட்டத்தை விட ரூ.847 கோடி கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர், தாட்கோ மேலாளர், கைத்தறித்துறை உதவி இயக்குனர் மற்றும் வங்கியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்