தஞ்சையில், கஞ்சா விற்ற ரவுடி கைது - தப்பி ஓடிய போது கீழே விழுந்ததில் கால் முறிந்தது

தஞ்சையில் கஞ்சா விற்ற ரவுடி கைது செய்யப்பட்டார். முன்னதாக அவர் தப்பி ஓடிய போது கீழே விழுந்ததில் கால் முறிந்தது.

Update: 2019-09-22 21:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை கீழவாசல் வெள்ளைப்பிள்ளையார் கோவில் ரவுண்டானா அருகே சிலர் நின்று கொண்டு கஞ்சா விற்பனை செய்வதாக தஞ்சை நகர கிழக்குப்போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது போலீஸ் ஜீப் வருவதைப்பார்த்ததும் கஞ்சா விற்ற வாலிபர் ஒருவர் தப்பி ஓடினார். மேலும் அருகில் இருந்த பாலத்தில் இருந்து அவர் கீழே குதித்தார். அப்போது அவருடைய கால் முறிந்தது. உடனடியாக போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் அவர் தஞ்சை கரந்தையை சேர்ந்த ராஜா என்ற குஜிலிராஜா (வயது28) என்றும் பிரபல ரவுடி என்பதும் தெரிய வந்தது. அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் ராஜாவின் கால் முறிந்ததால் அவரை கிசிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்