தடயங்கள் சேகரிப்பது குறித்து போலீசாருக்கு பயிற்சி

பெரம்பலூர் மாவட்ட போலீசாருக்கு தடயங்களை எவ்வாறு சேகரிப்பது குறித்த பயிற்சி நேற்று பெரம்பலூரில் நடந்தது.

Update: 2019-09-22 22:30 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட போலீசாருக்கு தடயங்களை எவ்வாறு சேகரிப்பது குறித்த பயிற்சி நேற்று பெரம்பலூரில் நடந்தது. இதற்கு ஓய்வு பெற்ற தடய அறிவியல் ஆய்வக அதிகாரி பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ரவீந்திரன் (பெரம்பலூர்), தேவராஜன் (மங்களமேடு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சியில் ஓய்வு பெற்ற தடய அறிவியல் ஆய்வக அதிகாரி பாலசுப்பிரமணியன் பேசுகையில், குற்றச்செயல் நடக்கும் பகுதியில், தடயங்களை எவ்வாறு ஆய்வு செய்ய வேண்டும். தடயங்களை எவ்வாறு சேகரிக்க வேண்டும். தடயங்களை எவ்வாறு ஆய்வகத்திற்கு அனுப்புவது, தடயங்களை சேகரிக்கும்போது ஏற்படும் பிரச்சினைகளை கையாளும் முறைகள் குறித்து விளக்கி போலீசாருக்கு பயிற்சி அளித்தார். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுகந்தி (பாடாலூர்), கலா (அரும்பாவூர்), கலையரசி (பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம்), நாஞ்சில்குமார் (மங்களமேடு), (பொறுப்பு) நித்யா (குன்னம்) உள்பட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் பலர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

மேலும் செய்திகள்