கிரு‌‌ஷ்ணகிரி கால பைரவர் கோவிலில் தேய்பிறை அ‌‌ஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் பங்கேற்பு

கிரு‌‌ஷ்ணகிரி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அ‌‌ஷ்டமியையொட்டி பக்தர்கள் பூசணியில் விளக்கேற்றி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

Update: 2019-09-22 22:30 GMT
கிரு‌‌ஷ்ணகிரி,

கிரு‌‌ஷ்ணகிரி பழையபேட்டை அடுத்த படேதலாவ் ஏரிக் கோடிக்கரையில் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த காலபைரவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு தேய்பிறை அ‌‌ஷ்டமியன்றும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். அதே போல் நேற்று தேய்பிறை அ‌‌ஷ்டமியையொட்டி காலபைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

இதையொட்டி காலையில் காலபைரவருக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பூசணியில் விளக்கேற்றி தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். பின்னர் பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அன்னதானம்

இதையொட்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமியை தரிசனம் செய்தனர். இதில் கிரு‌‌ஷ்ணகிரி மற்றும் பக்கத்து மாநிலங்களாக கர்நாடகா, ஆந்திராவில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமியை தரிசனம் செய்தனர். இவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்