பொய்சரில் கள்ளநோட்டு அச்சிட்டு புழக்கத்தில் விட்ட 2 பேர் கைது

பொய்சரில் கள்ளநோட்டு அச்சிட்டு புழக்கத்தில் விட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-09-24 23:14 GMT
வசாய்,

பால்கர் மாவட்டம் பொய்சர் காய்கறி மார்க்கெட்டில் வியாபாரியாக இருந்து வருபவர் லட்சுமி சம்பவத்தன்று 2 பேர் அவரிடம் வந்து காய்கறிகளை வாங்கி கொண்டு பணநோட்டுகளை கொடுத்தனர். இதனை வாங்கி பார்த்தபோது, அது கள்ளநோட்டு என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் தனது மகனை அங்கு வரவழைத்தார்.

இதற்கிடையில் கள்ள நோட்டை கொடுத்த 2 பேரும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். ஆனால் லட்சுமி சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் தப்பி செல்ல முயன்ற 2 பேரையும் பிடித்தனர். அவர்கள் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுவது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். விசாரணையில், அவர்களது பெயர் சஞ்சய் குப்தா மற்றும் மனோஜ் கவுதம் என்பதும், பொய்சர் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து கள்ளநோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அந்த வீட்டுக்கு சென்று கள்ளநோட்டுகள் அச்சடிக்க பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் ரூ.45 ஆயிரம் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்