தமிழக அரசின் அனைத்து திட்டங்களும் ஏழை-எளிய மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தகவல்

தமிழக அரசின் அனைத்து திட்டங்களும் ஏழை- எளிய மக்களுக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2019-09-25 22:45 GMT
குத்தாலம்,

மயிலாடுதுறை அருகே ஆனந்ததாண்டவபுரம் ஊராட்சியில் ராதா கிருஷ்ணன் எம்.எல்.ஏ. பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் 50 பேர், தாங்கள் நீர்நிலை புறம்போக்கில் குடியிருப்பதாகவும், அதனை நத்தம் புறம்போக்காக மாற்றம் செய்து பட்டா வழங்கும்படியும் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். அதற்கு அவர், இதுகுறித்து விரைவில் வருவாய்த்துறையினரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதைத் தொடர்ந்து முதியோர் ஓய்வூதியம், வீட்டுமனைப்பட்டா, அரசின் பல்வேறு நலஉதவிகள் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள், எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அப்போது அவர் கூறுகையில், தமிழக அரசின் அனைத்து திட்டங்களும் ஏழை-எளிய மக்களுக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல் குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு அதிக கவனம் செலுத்தி தீர்க்கப்பட்டு வருகிறது என்றார்.

10 ஊராட்சிகளில்...

அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) இளங்கோவன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பன்னீர்செல்வம், பிரேமா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவருமான முருகவேல் மற்றும் ஒன்றிய அலுவலர்கள், வருவாய்த்துறையினர், ஊராட்சி செயலாளர்கள் உடன் இருந்தனர்.

இதனை தொடர்ந்து கீழமருதாந்தநல்லூர், சேத்தூர், தலைஞாயிறு, பட்டவர்த்தி, வரதம்பட்டு உள்பட 10 ஊராட்சிகளில் எம்.எல்.ஏ. பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

மேலும் செய்திகள்