600 பயனாளிகளுக்கு ரூ.4½ கோடியில் திருமண நிதியுதவி-தாலிக்கு தங்கம் வருவாய் அதிகாரி-எம்.எல்.ஏ., வழங்கினர்

பெரம்பலூர் மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி பெரம்பலூரில் நேற்று நடந்தது.

Update: 2019-09-25 22:45 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி பெரம்பலூரில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், 10 மற்றும் 12-ம் வகுப்பு பயின்ற 100 பயனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் நிதியுதவியும், தலா 8 கிராம் தங்கமும், பட்டம் மற்றும் பட்டயபடிப்பு பயின்ற 500 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவியும், தலா 8 கிராம் தங்கமும் என மொத்தம் 600 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 41 லட்சத்து 71 ஆயிரத்து 738 மதிப்பிலான திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கத்தை மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் ரேவதி மற்றும் பெரம்பலூர்-அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவரும், அ.தி.மு.க. ஆலத்தூர் ஒன்றிய செயலாளருமான கர்ணன், வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்