பஞ்சப்பட்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க கோரி கவன ஈர்ப்பு போராட்டம்

பஞ்சப்பட்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க கோரி கவன ஈர்ப்பு போராட்டம் நடந்தது.

Update: 2019-09-25 23:00 GMT
லாலாபேட்டை,

கரூர் மாவட்டம், கிரு‌‌ஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் பஞ்சப்பட்டி ஏரி உள்ளது. தமிழகத்தின் மூன்றாவது பெரிய ஏரி ஆகும். தற்போது போதிய மழை இல்லாததால் இந்த ஏரி மிகவும் வறண்டு காய்ந்து கிடக்கிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர். மேலும் காவிரியிலிருந்து வீணாக கடலில் கலக்கும் உபரிநீரை குழாய் மூலம் பஞ்சப்பட்டி ஏரிக்கு திறந்து விட்டால் விவசாயத்திற்கு பயன் உள்ளதாக இருக்கும் என கூறி, நேற்று காலை பஞ்சப்பட்டி பஸ் நிலையம் அருகே பொதுமக்கள் கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோ‌‌ஷம்

இதற்கு பஞ்சப்பட்டி பசுமை பூமி அறக்கட்டளை தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். இதில் பஞ்சப்பட்டி, போதுராவுதன்பட்டி, பழையஜெயங்கொண்டம், வயலூர், சிவாயம், சிந்தலவாடி உள்பட 23 கிராம ஊராட்சிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கைகள் குறித்து கோ‌‌ஷம் எழுப்பினர். போராட்டத்தையொட்டி லாலாபேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்