திருவாரூர் அருகே மக்கள் நேர்காணல் முகாம்: 201 பேருக்கு ரூ.1½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

திருவாரூர் அருகே நடந்த மக்கள் நேர்காணல் முகாமில் 201 பேருக்கு ரூ.1½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆனந்த் வழங்கினார்.

Update: 2019-09-26 23:00 GMT
திருவாரூர்,

திருவாரூர் வட்டம், கீழகூத்தங்குடி கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். அப்போது பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். முன்னதாக துறை வாரியாக அரசு நலத்திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை அவர் பார்வையிட்டார். பின்னர் பிரதம மந்திரி ஓய்வூதிய திட்ட அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

இதில் வருவாய்த்துறை சார்பில் 4 பேருக்கு ரூ.40 ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாவும், வேளாண்மைத்துறை சார்பில் 7 பேருக்கு ரூ.54 ஆயிரத்து 150 மதிப்பிலான தெளிப்பு நீர் பாசன குழாயுடன்கூடிய கருவியும், தோட்டக்கலைத்துறை சார்பில் 6 பேருக்கு ரூ.52 ஆயிரத்து 730 மதிப்பிலான முதல்-அமைச்சரின் கிராமப்புற காய்கறி உற்பத்தி திட்ட விதை பைகள் என மொத்தம் 201 பேருக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 460 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

இதில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் மணிவண்ணன், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் ஜெயதீபன், தாசில்தார் நக்கீரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்