விடுபட்டவர்களுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் மனு

விடுபட்டவர்களுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Update: 2019-09-30 23:00 GMT
திருவாரூர்,

கடந்த 2018-19-ம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அன்னவாசல் தென்பாதி, புது தேவங்குடி பகுதி விவசாயிகள் பெயர் விடுப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட பாமணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கேட்டப்போது இதுவரை பயிர் காப்பீட்டு தொகை வரவில்லை என கூறுகின்றனர். எனவே விடுப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயிர் காப்பீட்டு தொகை

நீடாமங்கலம் ஒன்றியம் காளாச்சேரி கிராம விவசாயிகளுக்கு கடந்த 3 ஆண்டுகளாக பயிர் காப்பீட்டு தொகை வழங்கவில்லை. கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே எங்கள் பகுதி விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல திருவாரூர் ஒன்றியம் அடியக்கமங்கலம், சேமங்கலம், ஓடாச்சேரி பகுதியை சேர்ந்த விவசாயிகள் பயிர் காப்பீட்டு தொகை வழங்க கோரி கோரிக்கை மனு அளித்தனர். 

மேலும் செய்திகள்