பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி நாகையில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-10-02 23:00 GMT
நாகப்பட்டினம்,

நாகை புதிய பஸ் நிலையம் அருகே தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட துணைத்தலைவர் காளிமுத்து தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் இளவரசன், செயலாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் மாரிமுத்து, அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் கிரு‌‌ஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, ஊட்டச்சத்து, கிராம உதவியாளர் உள்ளிட்டவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

மருத்துவப்படி

மாநில அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரமும், மருத்துவப்படி ரூ.1,000 ஆயிரமும் வழங்க வேண்டும். அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் நாகை தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் சிவகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் வட்ட பொருளாளர் பாபுராஜ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்