திருச்செங்கோட்டில் கடன் வாங்கித்தருவதாக கூறி ரூ.6½ கோடி மோசடி சேலத்தை சேர்ந்தவர் கைது

திருச்செங்கோட்டில் கடன் வாங்கித்தருவதாக கூறி பலரிடம் ரூ.6½ கோடி வரை மோசடி செய்ததாக சேலத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-10-02 22:15 GMT
திருச்செங்கோடு,

சேலம் சின்ன திருப்பதி பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (41) என்பவர் எனது பெட்ரோல் பங்க் விரிவாக்கத்துக்கு குறைந்த வட்டியில் ரூ.2 கோடி கடன் வாங்கித்தருவதாக கூறினார். இதை நம்பி திருச்செங்கோடு கச்சேரி வீதியில் உள்ள அசோகன் என்பவரது வீட்டில் வைத்து ரூ.2 கோடி கடன் பெறுவதற்கான டாக்குமெண்ட் செலவுக்காக அவர் கேட்ட ரூ.55 லட்சத்தை கொடுத்தேன்.

அதன்பிறகு கடன் தொகை பெற்றுத்தராததால் மீண்டும் திருச்செங்கோடு அசோகன் வீட்டில் வைத்து ராஜ்குமாரிடம் எனது ரூ.55 லட்சத்தை திருப்பி கேட்டபோது, ராஜ்குமார் என்னை கண்டபடி திட்டியதுடன் உன்னை குடும்பத்துடன் வைத்து எரித்து விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

கைது

இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர் பலரிடம் பல கோடி ரூபாய் கடன் பெற்று தருவதாக கூறி ரூ. 6½ கோடி வரை மோசடி செய்தது தெரியவந்து உள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை சேகரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்