கூத்தாநல்லூர் அருகே பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்

கூத்தாநல்லூர் அருகே பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ஆனந்த் தொடங்கி வைத்தார்.

Update: 2019-10-08 22:45 GMT
கூத்தாநல்லூர்,

கூத்தாநல்லூர் அருகே உள்ள பொதக்குடி ஊராட்சியில் தூய்மையே சேவை இயக்கம் சார்பில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசுனார். அப்போது அவர் கூறியதாவது:-

பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு பல்வேறு வகையில் தீங்கு விளைவிக்கக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அவைகளுக்கு பதிலாக மாற்றுப்பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் கமல்கிஷோர், மகளிர் திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா, மன்னார்குடி உதவி கலெக்டர் புண்ணியக்கோட்டி, கூத்தாநல்லூர் தாசில்தார் மலர்க்கொடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்