முதியோர்களை பேணி காப்பது நமது கடமை நீதிபதி மகிழேந்தி பேச்சு

முதியோர்களை பேணி காப்பது நமது கடமை என நீதிபதி மகிழேந்தி பேசினார்.

Update: 2019-10-08 23:00 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு மற்றும் ரோஜாவனம் முதியோர் இல்லம் சார்பில் உலக முதியோர் தினம் கொண்டாடப்பட்டது. ரோஜாவனம் இயக்குனர் அருள்ஜோதி தலைமை தாங்கினார். தலைமை செவிலியர் ஜெய்னி வரவேற்று பேசினார். கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆலோசனை வழங்கினார். சிறப்பு விருந்தினராக குமரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு நீதிபதி மகிழேந்தி கலந்து கொண்டு நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:-

முதியோர்களுக்கு சரியான பாதுகாப்பும், மகிழ்ச்சியும் இருந்தால் எந்தவித கஷ்டங்கள் இல்லாமல் நீண்ட நாள் வாழலாம். முதியோர்களை மதித்து பேணி காப்பது நாம் ஒவ்வொருவருடைய கடமை.

இலவச சட்ட உதவி மையம்

முதிேயார்களுக்காக இலவச சட்ட உதவி மையத்தினை ஏற்படுத்தி வக்கீல்களை கொண்டு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் ஒவ்வொரு வாரம் புதன்கிழமை ரோஜாவனம் முதியோர் இல்லத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்பட்டு வருகிறது. முதியோர்கள் இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், ரோஜாவனம் மேலாளர் சாமுவேல் ராஜன், ரோஜாவனம் செவிலியர் கல்லூரி முதல்வர் புனிதா, பேராசிரியர்கள் சிபியா, செல்லம்மாள், பரமேஸ்வரி மற்றும் அலுவலக கண்காணிப்பாளர் செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் முதியோர் இல்ல ஆலோசகர் சுசீலா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்