நாமக்கல், சேந்தமங்கலத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், சேந்தமங்கலத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-10-09 23:00 GMT
நாமக்கல்,

ஜூலை மாதம் நடைபெற வேண்டிய கிராம நிர்வாக அலுவலர்களுக்கான கலந்தாய்வை இதுவரை நடத்தாததை கண்டித்து நேற்று நாமக்கல் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். வட்ட தலைவர் செந்தில் கண்ணன், வட்ட செயலாளர் பிரகா‌‌ஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மின்சாரம், இணையதளவசதி, கணினி மற்றும் கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வலியுறுத்தி பலமுறை மனு கொடுத்தும்நிறைவேற்றாததை கண்டித்தும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் ‘இ’ அடங்கல் பணியை செய்ய சொல்லி கிராம நிர்வாக அலுவலர்களை மிரட்டும் மாவட்ட அதிகாரியை கண்டித்தும் கிராம நிர்வாக அலுவலர்கள் கோ‌‌ஷங்கள் எழுப்பினர். முடிவில் மாவட்ட பொருளாளர் ராமன் நன்றி கூறினார்.

சேந்தமங்கலம்

அதே போல சேந்தமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்ட தலைவர் குமார் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில், சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்