பிரதமர் மோடி-சீன அதிபருக்கு வரவேற்பு: கலை நிகழ்ச்சிகள் இறுதி ஒத்திகை தலைமைச் செயலாளர் பார்வையிட்டார்

பிரதமர் மோடி-சீன அதிபருக்கு வரவேற்பு கலை நிகழ்ச்சிகள் இறுதி ஒத்திகை நடந்தது.

Update: 2019-10-10 20:38 GMT
சென்னை,

பிரதமர் நரேந்திர மோடி-சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரின் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்றும், நாளையும் அரங்கேறுகிறது.

இதையொட்டி, தமிழக அரசு சார்பில் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அந்தவகையில் கொம்பு இசை தொடங்கி கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, தப்பாட்டம், மங்கள இசை, பரதநாட்டியம் உள்பட 12 வகையான கலைநிகழ்ச்சிகளுக்கு 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த கலைஞர்களுக்கான ஒத்திகை நிகழ்ச்சி கடந்த 2 நாட்களாக சென்னை பெரியமேட்டில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வந்தது. இறுதி ஒத்திகை நிகழ்ச்சி நேற்று அரங்கேறியது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியை தலைமைச்செயலாளர் க.சண்முகம் பார்வையிட்டார். புதிய ஆலோசனைகளையும் அவர் வழங்கினார்.

மேலும் செய்திகள்