நெல்லிக்குப்பம் அருகே டெங்கு கொசுக்கள் உற்பத்திக்கு காரணமாக இருந்த பள்ளிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

நெல்லிக்குப்பம் அருகே டெங்கு கொசுக் கள் உற்பத்திக்கு காரணமாக இருந்த பள்ளிக்கூடத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் அன்புசெல்வன் அதிரடி உத்தரவிட்டார்.

Update: 2019-10-11 21:30 GMT
நெல்லிக்குப்பம்,

கடலூர் மாவட்டத்தில் கடந்த மாதத்தில் மழை பெய்தது. இதனை தொடர்ந்து டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச் சலால் 25-க்கும் மேற் பட்டவர்கள் பாதிக் கப்பட்டுள் ளனர். அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதுமட்டுமின்றி நூற்றுக்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் கடலூர் மாவட்ட கலெக்டர் அன்பு செல்வன் நெல்லிக்குப்பம் மற்றும் கிராமங்களில் திடீரென ஆய்வு மேற்கொண் டார். வாழப்பட்டு கம்பர் நகரில் சிமெண்டு தொட்டிகள் தயாரிக்கும் இடத்தில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாக காரணமாக இருந்த தண்ணீர் தொட்டியை பார்வையிட்ட கலெக்டர், அந்த தண்ணீரை அப்புறப்படுத்தி தொட்டியை சுத்தமாக பராமரிக்குமாறு அதன் உரிமையாளருக்கு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கூடத்திற்கு சென்று கலெக்டர் அன்புசெல்வன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி வளாகத்திலும், கழிப்பறை பகுதியிலும் டெங்கு கொசுக் கள் உற்பத்தியாகி இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அந்த பள்ளி நிர்வாகத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும் பள்ளி வளாகத்தையும், கழிவறையை யும் சுத்தம் செய்ய உத்தர விட்டார். இதனை தொடர்ந்து அவர், வாழப்பட்டு கிராமம் முழுவதும் நடந்து சென்று பார்வையிட்டார். அங்கு சாலையோரத்தில் தேங்கி கிடந்த கழிவுநீரை அகற்றவும், குழிதோண்டி குடிநீர் பிடிப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர் களுக்கு உத்தரவிட்டார்.

நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு சென்ற கலெக்டர் அன்புசெல்வன், பல்வேறு வழக்குகளில் பறி முதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நூற்றுக் கும் மேற்பட்ட வாகனங்களை பார்வை யிட்டார். அதில் ஒரு மோட்டார் சைக்கிளில் தேங்கி இருந்த தண்ணீரில் டெங்கு கொசுப்புழுக்கள் இருந்தன. மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கட்டிடத்தின் மாடியில் வைக்கப்பட்டிருந்த டயர்களில் தேங்கி இருந்த தண்ணீரிலும் டெங்கு கொசுப்புழுக்கள் இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த கலெக்டர் அன்பு செல்வன், போலீசாரை அழைத்து கண்டித்தார். மேலும் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை சட்டப்படி அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார். ஆய்வின்போது சுகாதாரத் துறை இணை இயக்குனர் டாக்டர் கீதா, நகராட்சி கமிஷனர் பிரபாகரன், நகராட்சி பொறியாளர் வெங்க டாசலம், துப்புரவு அலுவலர் (பொறுப்பு) வாசு, இளநிலை உதவியாளர் கணேஷ், முருகன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்