திருவாரூரில் மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள் வருகிற 18, 19-ந் தேதிகளில் நடக்கிறது

திருவாரூரில் மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள் வருகிற 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

Update: 2019-10-12 23:00 GMT
திருவாரூர்,

திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம் கேம்பைன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் வருகிற 18 மற்றும் 19-ந் தேதிகளில் மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள் நடைபெற உள்ளன. இளநிலை பிரிவில் மழலை வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிப்பவர்களும், முதுநிலை பிரிவில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளும் கலந்து கொள்ள அனுமதிக்கப் படுவர்.

மாணவர்கள் பிரிவில் இளநிலை மற்றும் முதுநிலை பிரிவுகளில் ஒரு பள்ளியில் இருந்து இரண்டு ஒற்றையர் மற்றும் இரண்டு இரட்டையர் அணிகளும், மாணவிகள் பிரிவில் இளநிலை மற்றும் முதுநிலை பிரிவுகளில் ஒரு பள்ளியில் இருந்து இரண்டு ஒற்றையர் மற்றும் இரண்டு இரட்டையர் அணிகள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். ஒரு போட்டியாளர் ஒற்றையர் பிரிவில் அல்லது இரட்டையர் பிரிவில் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப் படுவர்.

இணைய தளத்தில் விண்ணப்பிக்க...

போட்டியில் பங்கேற்கும் மாணவ-மாணவிகள் விண்ணப்பத்தினை ‘‘ sdat.tn.gov.in ’’ என்ற இணைய தளத்தில் ‘‘ SDAT Online Application ’’ மூலமாக விண்ணப்பம் செய்ய வேண்டும். போட்டிகளில் ஒவ்வொறு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப் பரிசுகளும், சான்றிதழ்களும் அளிக்கப்படும். மாவட்ட போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள், மாநில போட்டிக்கு அரசு செலவில் அழைத்து செல்லப்படுவர்.

மாவட்ட போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்கு பயணப்படி, தினப்படி அளிக்கப்பட மாட்டாது. போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் பள்ளியின் அடையாள அட்டை அசல் அல்லது புகைப்படம் ஒட்டிய அடையாள சான்றினை பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து பெற்று வர வேண்டும். மேற்கொண்டு விவரம் பெற திருவாரூர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை தொடர்பு கொண்டு விவரம் பெற்றிடலாம். திருவாரூர் மாவட்டத்தில் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் இந்த போட்டிகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படு கிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்