உலகம் முழுவதும் இருந்து பங்கேற்கின்றனா்: திருச்சி என்.ஐ.டி. முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி

உலகம் முழுவதும் இருந்து பங்ேகற்கின்றனா்: திருச்சி என்.ஐ.டி. முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி சென்ைனயில் ஜனவாி மாதம் நடக்கிறது.

Update: 2019-10-12 22:30 GMT
திருச்சி,

என்.ஐ.டி. முன்னாள் மாணவர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மற்றும் திருச்சி கிளை கூட்டம் ஒரு ஓட்டலில் நேற்று நடந்தது. கூட்டத்தில் என்.ஐ.டி.இயக்குனர் மினி ஷாஜி தாமஸ், முன்னாள் மாணவர் சங்க தலைவர் கிருஷ்ணசாய், என்.ஐ.டி. திருச்சி டீன் ராமன் சங்கரநாராயணன் மற்றும் முன்னாள் மாணவர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும் சங்க தலைவர் கிருஷ்ணசாய் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறுகையில், “என்.ஐ.டி. முன்னாள் மாணவர் சங்கத்தின் கிளை திருச்சி, சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களிலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் உள்ளது. திருச்சி என்.ஐ.டி.யில் படித்த மாணவர்கள் உலகம் முழுவதும் பரவி உள்ளனர். அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் வகையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி அடுத்த ஆண்டு (2020) ஜனவரி மாதம் 4-ந் தேதி சென்னையில் எம்.ஜி.எம்.மில் நடைபெற உள்ளது. இதில் உலகம் முழுவதும் இருந்து என்.ஐ.டி. முன்னாள் மாணவர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இதில் பிரபல முன்னணி நிறுவன அதிகாரிகள், தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். சங்கத்தின் மூலம் திருச்சி என்.ஐ.டி.க்கு பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்து வருகிறோம். மேலும் பன்னாட்டு அளவிலான விளையாட்டு மைதானம், அருங்காட்சியகம் அமைக்கவும் ஆலோசித்துள்ளோம். இந்த சந்திப்பில் இந்நாள் மாணவர்களும் பங்கேற்க உள்ளனர்” என்றார்.

மேலும் செய்திகள்