உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது.

Update: 2019-10-13 22:30 GMT
திருச்சி,

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. மாநில தலைவர் பீட்டர்ராஜா தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் ராஜு சிறப்புரையாற்றினார். மாநில பொருளாளர் அன்பரசன் வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்தார். ஓராண்டு பணி நிறைவு செய்த உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை ஆணை வழங்க வேண்டும். 2019-20-ம் கல்வியாண்டுக்கான பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை, ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை இடைத்தேர்தல் நடத்தை விதிகள் முடிந்தவுடன் தளர்த்த வேண்டும். உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் அனைவருக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும். அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாவட்ட தலைவர் பக்கிரிசாமி வரவேற்றார். முடிவில் மாநில அமைப்பு செயலாளர் இளங்கோ நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்