கண்டர்விளாகம் தூய பாத்திமா அன்னை ஆலய அர்ச்சிப்பு விழா ஆயர் நசரேன் சூசை பங்கேற்பு

குளச்சல் அருகே கண்டர்விளாகம் தூய பாத்திமா அன்னை ஆலய விரிவாக்க அர்ச்சிப்பு விழா நேற்று நடந்தது. இ்தில் ஆயர் நசரேன் சூசை கலந்து கொண்டு ஆலயத்தை அர்ச்சித்து வைத்தார்.

Update: 2019-10-13 22:30 GMT
குளச்சல்,

குளச்சல் அருகே கண்டர்விளாகம் தூய பாத்திமா அன்னை ஆலய விரிவாக்கம் செய்யப்பட்டு அர்ச்சிப்பு விழா மற்றும் ஆலய திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு ஜெபமாலை பவனி நடந்தது. மாலை 4 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்து கொண்டு விரிவாக்கம் செய்யப்பட்ட ஆலயத்தை அர்ச்சித்து திறந்து வைத்து திருப்பலியை நிறைவேற்றினார். இதில் குளச்சல் மறை வட்ட முதன்மை பணியாளர் பிரான்சிஸ் டி.சேல்ஸ், பங்குத்தந்தை ஜாண் குழந்தை மற்றும் அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், பங்குமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இரவு 8 மணிக்கு அன்பு விருந்து நடந்தது. முன்னதாக ஆயர் நசரேன் சூசைக்கு பங்குமக்கள், ஆலய நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

தேர்பவனி

விழா நாட்களில் தினமும் மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, இரவு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

விழாவில் 19-ந்தேதி காலை 8 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி, மாலை 6.30 மணிக்கு ஆடம்பர மாலை திருப்புகழ், இரவு 8 மணிக்கு தேர் பவனி, 20-ந் தேதி காலை 9 மணிக்கு திருவிழா திருப்பலியை மறைமாவட்ட முதன்மை பணியாளர் கிலேரியஸ் தலைமையில் சென்னை அருட்பணியாளர் ஜெகத் கஸ்பார் மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு நன்றி வழிபாடு, கொடியிறக்கம், இரவு 7 மணிக்கு நடன போட்டி நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்