தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2019-10-13 23:00 GMT
தூத்துக்குடி, 

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 21-ந் தேதி நடக்கிறது. தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு மதியம் 11-55 மணிக்கு வந்தார்.

அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர்(போக்குவரத்து துறை), விஜயபாஸ்கர்(சுகாதாரத்துறை), தங்கமணி, ராஜலட்சுமி, ஓ.எஸ்.மணியன், ராஜேந்திர பாலாஜி, சரோஜா, காமராஜ், செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ ஆகியோர் பூங் கொத்து கொடுத்து வரவேற்றனர்.

தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, கூடுதல் கலெக்டர்(வருவாய்த்துறை) வி‌‌ஷ்ணுசந்திரன், உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன், மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன், தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேசுவரன், நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்பாலகோபாலன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அதே போன்று விமான நிலையத்தின் முன்பகுதியில் செண்டை மேளம் முழங்க, பூரண கும்ப மரியாதையுடன் திரளான அ.தி.மு.க.வினர் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர்.

நிகழ்ச்சியில் மாநில அ.தி.மு.க. அமைப்பு செய லாளரும், தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவருமான என்.சின்னத்துரை, சின்னப்பன் எம்.எல்.ஏ, முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார் உள்பட பலர் கலந்து கொண்ட னர்.

பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி அருகே உள்ள தனியார் ஓட்டலில் தங்கினார். அவர் மதிய உணவுக்கு பிறகு நாங்குநேரி தொகுதி பிரசாரத்துக்கு புறப்பட்டு சென்றார். 

மேலும் செய்திகள்