ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் டெங்கு தடுப்பு தினம் வியாழக்கிழமைதோறும் அனுசரிக்கப்படுகிறது

தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தலின் பேரில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் டெங்கு தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2019-10-17 23:00 GMT
சென்னை,

நிகழ்ச்சியில் மருத்துவ மாணவர்கள், செவிலியர் மாணவர்கள், மருந்தியல் மாணவர்கள், டாக்டர்கள் துப்புரவு பிரசாரம் மேற்கொண்டனர். மேலும் டெங்கு காய்ச்சலுக்கு காரணமான ஏடிஎஸ் கொசுக்கள் உற்பத்தி ஆகும் முறை, அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்து இந்த நிகழ்ச்சியில் விளக்கப்பட்டது. பின்னர் மருத்துவமனை டீன் டாக்டர் ஜெயந்தி நிருபர்களிடம் கூறியதாவது:–

ராஜீவ்காந்தி காந்தி அரசு பொது மருத்துவமனையில் டெங்கு தடுப்பு தினம் முதல் நாளாக இன்று (நேற்று) அனுசரிக்கப்பட்டது. இதில் மருத்துவமனையில் உள்ள அனைத்து வளாகங்களிலும், டெங்கு உற்பத்தி ஆகும் இடங்களை கண்டறிய குழுக்கள் நியமித்து, பிரதி வியாழக்கிழமை தோறும் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த துப்புரவு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் மருத்துவமனை வளாகத்தில் கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து, அதனை உற்பத்தி ஆகாமல் தடுக்க மருத்துகளை தெளிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுடன் மருத்துவர்கள், செவிலிய மாணவர்கள் ஒருங்கிணைந்து டெங்கு எதிர்ப்பு தினத்தை செயல் வழியில் நடைமுறை படுத்தவுள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை நிலைய அலுவலர் டாக்டர் திருநாவுக்கரசு, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்