ரூ.2¾ கோடி வெளிநாட்டு கைக்கெடிகாரங்கள் பறிமுதல்; வாலிபர் கைது

பாங்காங்கில் இருந்து கடத்தி வந்த ரூ.2¾ கோடி வெளிநாட்டு கைக்கெடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-10-18 22:20 GMT
மும்பை,

மும்பை சர்வதேச விமான நிலையத்தில், நேற்று முன்தினம் பாங்காங்கில் இருந்து வந்த விமானம் தரையிறங்கியது. இந்த விமானத்தில் சட்டவிரோதமாக கைக்கெடிகாரங்கள் கடத்தி வரப்படுவதாக புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் அந்த விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர். இதில், ஒரு பயணியின் உடைமைகளில் இருந்த பார்சலை பிரித்து பார்த்தனர். இதில் பிரபல வெளிநாட்டு நிறுவனத்தின் கைக்கெடிகாரங்கள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.2 கோடியே 70 லட்சம் ஆகும்.

இதையடுத்து அந்த பயணியை பிடித்து நடத்திய விசாரணையில், மும்பை வில்லேபார்லேவை சேர்ந்த கவின்குமார் மேத்தா (வயது24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசுார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்