கதவுகளை வெளிப்புறமாக பூட்டி 10 வீடுகளுக்கு தீ வைத்த 2 வாலிபர்கள் கைது

கதவுகளை வெளிப்புறமாக பூட்டி விட்டு 10 வீடுகளுக்கு தீ வைத்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-10-19 23:41 GMT
மும்பை,

மும்பை காந்திவிலி கிழக்கு மகாத்மாகாந்தி தெரு பகுதியில் 21 குடிசை வீடுகள் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் சம்பவத்தன்று குடிபோதையில் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த பிளாஸ்டிக் டிரம்மை தீ வைத்து கொளுத்தினர். பின்னர் அவர்கள் வசிக்கும் வீடுகளின் கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு சென்றனர்.

இந்தநிலையில், பிளாஸ்டிக் டிரம்மில் பற்றிய தீ, அங்கு கிடந்த துணிமணிகளில் பற்றி எரியதொடங்கியது. மேலும் அங்கு வரிசையாக இருந்த 10 குடிசை வீடுகளுக்கு தீ மளமள பரவ தொடங்கியது.

இந்தநிலையில், அந்த வழியாக சென்றவர்கள் தீ பற்றி எரிவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் உடனடியாக அங்கு எரிந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைத்தனர். இதனால் தீ மேலும் பரவாமல் அந்த 10 குடிசை வீடுகளும் தப்பியது. இல்லையென்றால் அந்த 10 வீடுகளும் தீப்பிடித்து எரிந்திருக்கும்.

இதையடுத்து அவர்கள் குடிசை வீட்டில் வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்த கதவை திறந்துவிட்டனர்.

இச்சம்பவம் குறித்து குரார் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீ சார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த ஹமான்சு பிண்டு குமார் (வயது23), சல்மான் முரட்சேக் (21) ஆகியோர் தான் குடிபோதையியில் தீ வைத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்