திருவள்ளூர், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

Update: 2019-10-22 22:15 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் சாலைவசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, வீட்டுமனைபட்டா, வேலைவாய்ப்பு, கடனுதவி, முதியோர் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோருக்கான உதவித்தொகை என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 279 மனுக்களை அளித்தனர். அதை பெற்றுக்கொண்ட கலெக்டர் அவற்றின் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப் பட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்ட கலெக்டர் மாற்றுத்திறனாளிகள் குறைகளை கேட்டறிந்து அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பன்னீர்செல்வம் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்