கன்னியாகுமரியில் 2-வது நாளாக கடல் சீற்றம் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

கன்னியாகுமரியில் 2-வது நாளாக நேற்று கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

Update: 2019-10-26 23:00 GMT
கன்னியாகுமரி,

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதே சமயத்தில் சில நாட்களாக பூத்துறை பகுதியில் கடல் சீற்றமாக இருந்தது. இந்தநிலையில் முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியிலும் 2 நாட்களாக கடல் அலையின் ஆக்ரோஷம் அதிகமாக இருந்ததை காண முடிந்தது. இதனால் நேற்று கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க போலீசார் தடை விதித்தனர். மேலும் யாராவது விபரீதத்தை அறியாமல் கடலுக்குள் இறங்கி குளிக்கிறார்களா எனவும் கண்காணித்தனர். எச்சரிக்கையையும் மீறி குளித்தவர்களை போலீசார் வெளியேற்றினர்.

இரவு வரை நீடித்தது

இதேபோல் கோவளம், சின்னமுட்டம், ஆரோக்கியபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கடல் சீற்றம் இருப்பதை காண முடிந்தது. கடல் சீற்றம் இரவு வரை நீடித்தது.

மேலும் செய்திகள்