திருவள்ளூர் அருகே மணல் கடத்தல்; 7 பேர் கைது

திருவள்ளூர் அருகே மணல் கடத்திய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-10-26 22:47 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு போலீசார் நேற்று முன்தினம் கூடப்பாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த 2 டிராக்டர்களை பறிமுதல் செய்த போலீசார் மணல் கடத்தியதாக கூடம்பாக்கத்தை சேர்ந்த செல்வகுமார்(45), உடன்வந்த டிராக்டர் டிரைவரான கூடம்பாக்கத்தை சேர்ந்த வெங்கட்ராமன் (35) ஆகியோரை கைது செய்து இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

அதேபோல திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் போலீசார் நேற்று முன்தினம் மணவாள நகர் பட்டரை பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்த போலீசார் மணல் கடத்தியதாக பட்டரையை சேர்ந்த வெங்கடேசன் (22), தணிகைவேல் (26) ஆகியோரை கைது செய்து இதுதொடர்பாக மேலும் விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் போலீசார் நேற்று முன்தினம் கசவ நல்லாத்தூர் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு மணல் கடத்தி வந்த ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதை கண்ட அந்த நபர் மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதுதொடர்பாக கடம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் ராம தண்டலம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த ஒரு டெம்போவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மணல் கடத்தியதாக டெம்போ டிரைவரான பெரும்பாக்கத்தை சேர்ந்த ஜான் (35), உடன் வந்த ஜெயக்குமார் (20) விஜய் (22) ஆகியோரை கைது செய்து இதுதொடர்பாக மேலும் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்