உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடித்த 20 பேர் மீது வழக்கு

உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடித்த 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2019-10-28 22:30 GMT
சிவகாசி,

தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதுகுறித்து தமிழக அரசும் உரிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

இந்த நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது சிவகாசி உட்கோட்ட போலீசார் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 அதன்படி சிவகாசி டவுன் போலீசார் கருத்தப்பாண்டி (வயது 26), பாஸ்கரன் (47), மாரீஸ்வரன் (26), கவுதம் (21), குருநாதன் (19), சாய்சங்கர்(20), அண்ணாமலை (19), அருண்பாண்டி (19), ஆனந்தராஜ் (19), பால்பாண்டி (20), கார்த்திக் (25), பிரேமானந்த் (27) ஆகிய 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதேபோல மாரனேரி போலீசார் பாண்டியராஜ் (32), திருச்செல்வம் (44) மீதும், சிவகாசி கிழக்கு போலீசார் சிவக்குமார் (19), குருசாமி (22), பால்பாண்டி (19), விஜயகுமார் (19), உதயவெங்கடேஷ் (19), பால்பாண்டி (28) ஆகிய 8 பேர் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்