அனுமதியின்றி மணல்,மண் அள்ளிவந்த டிராக்டர்கள் பறிமுதல்

அனுமதியின்றி மணல்,மண் அள்ளிவந்த டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2019-11-04 22:00 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிவஞானம் மற்றும் சப்-கலெக்டர் தினேஷ் ஆகியோர் விருதுநகர் மாவட்டம் முழுவதும் அனுமதி இன்றி திருட்டுதனமாக மண் மற்றும் மணல் அள்ளி வரும் வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாசில்தார்களுக்கும் உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த உத்தரவைத் தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் பெண் தாசில்தார் கிருஷ்ணவேணி தலைமையில் வருவாய் ஆய்வாளர் பால் துறை மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் கடந்த சில தினங்களாக மண் மற்றும் மணல் அள்ளிவரும் வாகனங்களை கண்காணித்தனர்.

அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மற்றும் மம்சாபுரம் ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி மண், மணல் அள்ளி வந்த 6 டிராக்டர்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவர பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டபோது மலையின் அடிவாரப் பகுதிகளில் மறைவான இடங்களில் மணல் பதுக்கி வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தாசில்தார் கிருஷ்ணவேணி அந்த மணலை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். மணல் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகம் கொண்டுவரப்பட்டு குவித்து வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்