காஞ்சீபுரத்தில், போலி டாக்டர் கைது

காஞ்சீபுரம் நகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் முத்து தலைமையில் சுகாதாரத்துறையினர் நேற்று அவருடைய கிளினிக்குக்கு சென்றனர். விசாரணையில், அவர் போலி டாக்டர் என்பது உறுதிபடுத்தப்பட்டது.

Update: 2019-11-07 22:15 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் காலண்டர் தெருவில் கிளினிக் நடத்தி வந்தவர் திருமலை (வயது 45). இவர் போலி மருத்துவம் பார்ப்பதாக சுகாதாரத்துறையினருக்கு புகார்கள் வந்தது. இதுகுறித்து காஞ்சீபுரம் நகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் முத்து தலைமையில் சுகாதாரத்துறையினர் நேற்று அவருடைய கிளினிக்குக்கு சென்றனர். அப்போது அங்கு இருந்த திருமலையிடம், சுகாதாரத்துறையினர் டாக்டருக்கான சான்றிதழை கேட்டனர். விசாரணையில், அவர் போலி டாக்டர் என்பது உறுதிபடுத்தப்பட்டது.

உடனடியாக கிளினிக்கில் இருந்த ஊசிகள், மருந்துகள் போன்றவற்றை சுகாதாரத்துறையினர் பறிமுதல் செய்தனர். போலி டாக்டர் திருமலையை பெரிய காஞ்சீபுரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமலையை கைது செய்தனர்.

திருமலை இதுவரை 2 முறை கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்