2 ஆயிரம் பேருக்கு ரூ.14½ கோடியில் தாலிக்கு தங்கம் - அமைச்சர் காமராஜ் வழங்கினார்

திருவாரூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் பேருக்கு ரூ.14½ கோடியில் திருமண நிதி உதவியுடன் தாலிக்கு தங்கத்தை அமைச்சர் காமராஜ் வழங்கினார்.

Update: 2019-11-08 22:45 GMT
திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் திருமண நிதி உதவியுடன் கூடிய தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு 2 ஆயிரம் பேருக்கு ரூ.14 கோடியே 41 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பிலான திருமண நிதி உதவியுடன் கூடிய தாலிக்கு தங்கத்தினை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழக அரசு பெண்கள் நலனில் அக்கறை கொண்டு, அவர்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஏழை பெண்களுக்கு திருமண நிதியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் சிறப்புக்குரியது.

இந்த திட்டத்தின் கீழ் தற்போது 2 ஆயிரம் பேருக்கு ரூ.6 கோடியே 90 லட்சம் மதிப்பிலான திருமண உதவித்தொகையும், ரூ.5 கோடியே 96 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பிலான தங்க நாணயமும் ஆக மொத்தம் ரூ.14 கோடியே 41 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பிலான திருமண நிதி உதவியுடன் கூடிய தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது. இதனை பயனாளிகள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கூடுதல் கலெக்டரும், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனருமான கமல் கிஷோர், மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், மாவட்ட சமூக நல அலுவலர் உமையாள், கண்காணிப் பாளர் செந்தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்